Published : 26 Sep 2020 02:37 PM
Last Updated : 26 Sep 2020 02:37 PM

சீனாவில் ஒரு மாதத்துக்குப் பிறகு அறிகுறிகளற்ற கரோனா பாதிப்பு

சீனாவில் ஒரு மாதத்துக்குப் பிறகு கரோனா அறிகுறி இல்லாத நிலையில் இருவருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீன நோய்த் தடுப்பு மையம் தரப்பில் கூறுகையில், “சீனாவில் ஒரு மாதத்துக்குப் பிறகு கரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லாத இருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அசுத்தமான உணவுகளைக் கையாண்டதன் விளைவாக இவர்களைக் கரோனா தொற்று தாக்கியுள்ளது.

சீனாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கரோனா தொற்று யாருக்கும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் அறிகுறிகளற்ற இருவருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் 85,337 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். சீனாவின் தேசிய மருத்துவ நிறுவனமான சினோபார்ம் தயாரிக்கும் கரோனா தடுப்பு மருந்துகள் பல்வேறுகட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின் தற்போது பயன்பாட்டுக்கு வரவுள்ளன.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவிய கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் கரோனா விவகாரத்தில் வெளிப்படையாக நடந்து கொள்வதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடர்ந்து கூறி வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x