எஸ்மண்ட் விக்ரமசிங்க நினைவு விருது விழா: கொழும்பில் இன்று நடைபெறுகிறது

எஸ்மண்ட் விக்ரமசிங்க நினைவு விருது விழா: கொழும்பில் இன்று நடைபெறுகிறது
Updated on
1 min read

எஸ்மண்ட் விக்ரமசிங்க நினைவு விருது விழா கொழும்பில் இன்று நடைபெறுகிறது.

இலங்கையின் மிகப் பெரிய ஊடக குழுமம் லேக் ஹவுஸ் குருப். இந்த நிறுவனம் 1973-ல் தேசியமயமாக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எஸ்மண்ட் விக்ரமசிங்க 1985-ல் காலமானார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தந்தையான எஸ்மண்ட் விக்ரமசிங்க அந்த நாட்டு ஊடகத் துறையின் முன்னோடி ஆவார். சர்வதேச பத்திரிகையாளர் அறக்கட்டளை சார்பில் வழங்கப் படும் தங்க பேனா உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள் ளார். அவரது நினைவாக ஆண்டு தோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா கொழும்பில் இன்று மாலை நடைபெறுகிறது.

இதில் ‘தி இந்து’ குழுமத் தலைவர் என். ராம் சிறப்புரை யாற்றுகிறார்.

லேக் ஹவுஸ் குழுமத்தில் இருந்து டெய்லி நியூஸ் (ஆங்கிலம்), தினகரன் (தமிழ்), தினமினா (சிங்களம்), சண்டே அப்சர்வர் வார இதழ் (ஆங்கிலம்), தினகரன் வார இதழ் (தமிழ்), தி சிலுமினா வார இதழ் (சிங்களம்) உள்ளிட்ட பத்திரிகைகள் வெளி யிடப்படுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in