சீனாவின் 150 போலிக் கணக்குகளை நீக்கிய ஃபேஸ்புக்

சீனாவின் 150 போலிக் கணக்குகளை நீக்கிய ஃபேஸ்புக்
Updated on
1 min read

சீனாவிலிருந்து இயங்கிய 150 போலி ஃபேஸ்புக் கணக்குகளைத் தடை செய்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “நாங்கள் விதிமுறைகளுக்கு மாறாகச் செயல்பட்ட 155 ஃபேஸ்புக் கணக்குகள், 9 குழுக்கள், ஆறு இன்ஸ்டாகிராம் பக்கங்களை நீக்கியுள்ளோம். இதில் 150 ஃபேஸ்புக் கணக்குகள் சீனாவைச் சேர்ந்தவை. இவை அமெரிக்கத் தேர்தல் பற்றிய தகவல்களைப் பதிவேற்றிக் கொண்டிருந்தன” என்று தெரிவித்துள்ளது.

போலிக் கணக்குகள் தொடர்பாக, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், சீனா போன்ற நாடுகளைக் கவனமாகக் கண்காணித்து வருகிறோம் என்று ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்து சீனா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை உடைய நாடாக சீனா இருந்தபோதும், ஊடகங்களின் மீதான கட்டுப்பாட்டைத் தளர்த்தவில்லை.

பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயக்கப்பட்டும் கிரேட் ஃபயர் வால் ஆப் சீனா என்ற மென்பொருள் மூலம், பல்வேறு இணையதளங்களை சீன அரசு தடை செய்து வைத்துள்ளது. எனினும் கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் சில தளர்வுகளை சீனா அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்கத் தேர்தல் குறித்தும் அதன் வேட்பாளர்கள் குறித்தும் ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகளை சீனாவிலிருந்து இயங்கும் போலிக் கணக்குகளில் வெளியானதைத் தொடர்ந்து அவை தற்போது தடை செய்யப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in