இந்தியா - பாகிஸ்தான் நேரடி பேச்சுவார்த்தை: ஐ.நா. அழைப்பு

இந்தியா - பாகிஸ்தான் நேரடி பேச்சுவார்த்தை: ஐ.நா. அழைப்பு
Updated on
1 min read

எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ஐ.நா. பொது செயலாளர் பான் கீ மூன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த மாதம் திட்டமிடப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு செயலாளர்கள் நிலையிலான பேச்சு கடைசி கட்டத்தில் ரத்து செய்யப்பட்டது குறித்து ஐ.நா. கவலைத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இது குறித்து பான் கீ மூன் செய்தித் தொடர்பாளர் ஸ்டீஃபன் ஜாரிக் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, " நாங்கள் உலக நாடுகள் பிரச்சினைகளை கூர்ந்து கவனித்து வருகிறோம். அதேபோல பாகிஸ்தானும் இந்தியா மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம்.

தற்போதைய எல்லைப் பிரச்சினைகளுக்கு நேரடி பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வாகும்" என்று பான் கீ மூன் கூறியதாக ஜாரிக் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in