

வெனிசூலா நாட்டின் கரபோபோ மாகாணம், டொகுயிட்டோ நகரில் உள்ள சிறை வளாகத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 17 பேர் பலியாயினர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறை வளாக தீ விபத்தில் கைதிகள் மற்றும் பார்வையாளர்கள் உட்பட 17 பேர் பலியாகி உள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் தெரிய வில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
“கடந்த 2008-ம் ஆண்டு முதல் வெனிசூலா நாட்டு சிறைக் கைதிகள் எண்ணிக்கை இரண்டு மடங்காகி உள்ளது. தீ விபத்து நடந்த சிறை வளாகம் 900 கைதிகளை அடைத்து வைப்பதற்கான வசதி கொண்டது. ஆனால் அங்கு இதுபோல் மூன்று மடங்கு கைதிகள் அடைக்கப் பட்டுள்ளனர்” என அந்நாட்டு சிறை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.