

சவுதி அரேபியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,28,144 ஆக அதிகரித்துள்ளது.
“சவுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் கரோனா வைரஸால் பலியாகி உள்ளனர். 539 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சவுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,28,144 ஆக அதிகரித்துள்ளது.
மொத்தம் 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். 3,02,870 பேர் குணமடைந்துள்ளனர்.சவுதியின் ஜெட்டா நகரில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என்று சவுதியின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சவுதிக்குப் பயணம் மேற்கொள்பவர்கள் கடந்த 48 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மேலும், அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல், அனைத்து வழிப் போக்குவரத்துகளும் சவுதியில் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிதல், சமூக விலகலைக் கடைப்பிடித்தல், தேவையின்றி வெளியே வராமல் இருத்தல் போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சவுதி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் பாதிப்பில் முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.