

பிரதமர் மோடியின் 70-வது பிறந்த நாளைக்கு ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனைத் தொடர்ந்து உலகத் தலைவர்கள் பலரும் மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் வெளியிட்ட வாழ்த்துக் கடிதத்தில், “எதிர்காலத்தில் நீங்கள் சிறந்த அனைத்தையும் பெற வாழ்த்துகள். கடந்த சில ஆண்டுகளில், இந்தியா மற்றும் ஜெர்மனிக்கு இடையிலான பாரம்பரியமான உறவுகளை மேலும் பலப்படுத்துவதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். உங்கள் அரசியல் செயல்பாடுகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலின் பதிவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புதின், நேபாளப் பிரதமர் ஷர்மா ஒலி ஆகியோரும் இந்தியப் பிரதமர் மோடியின் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்