

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் இரு மாகாணங் களிலுள்ள போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 10 போலீஸார் பலியாயினர். இத் தாக்குதலில் 5-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர்.
வடகிழக்கு படாக் ஷன் மாகாணத்தில், பெருமளவிலான தீவிரவாதிகள் காவல் துறையின் சோதனைச் சாவடிகள் மீது செவ்வாய்க்கிழமை இரவு தாக்கு தல் நடத்தினர். போலீஸாருக்கும் தலிபான்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், 6 போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர். கிழக்கு லக்மான் மாகாணத்தில், தலை முதல் கால் வரை பர்தா அணிந்து வந்த தீவிரவாதிகள், திடீரென மாவட்டக் காவல்துறை முகாம் மீது நடத்திய தாக்குதலில் நான்கு போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
படாக் ஷன் மாகாணம் யாம்கன் மாவட்டத்தின் பல்வேறு சோதனைச் சாவடிகள் மீதுஏராளமான தீவிரவாதிகள் ஒரே சமயத்தில் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல் புதன்கிழமையும் தொடர்ந்தது.
படாக் ஷன் மாகாண போலீஸ் தலைவர் பஸெலுதீன் அயார் கூறுகையில், “தாக்குதல் நடந்த இடங்களுக்கு மேல் ராணுவ ஹெலிகாப்டர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. அங்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட் டுள்ளன. இச்சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். மேலும் 3 போலீஸார் காயமடைந்துள்ளனர்” என்றார்.
லக்மான் மாகாணத்தில் நடந்த சண்டையில் தீவிரவாதிகள் தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டுள் ளது. எனினும், எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை.