சர்ச்சைக்குரிய கேலி சித்திரம்: சார்லி ஹெப்டோவுக்கு அல்கொய்தா மிரட்டல்

சர்ச்சைக்குரிய கேலி சித்திரம்: சார்லி ஹெப்டோவுக்கு அல்கொய்தா மிரட்டல்
Updated on
1 min read


சர்ச்சைக்குள்ளான வகையில், இஸ்லாம் சார்ந்த கேலிச் சித்தரங்களை சார்லி ஹெப்டோ பத்திரிகை மீண்டும் பதிப்பித்துள்ளதற்கு அல்கொய்தா தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

2015 ஆம் ஆண்டு முகமது நபிகள் குறித்த கேலிச் சித்திரங்களை வெளியிட்டதற்காக பாரீஸில் அமைந்துள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை நிறுவனம் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஸ்டெஃபேன் கார்போனியர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.

இஸ்லாம் சார்ந்த கேலிச் சித்திரத்தை சார்லி ஹெப்டோ பத்திரிகை வெளியிட்டபோது, அனைத்து இஸ்லாமிய நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்தே சார்லி ஹெப்டோ பத்திரிகை நிறுவனத்தின் மீது தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது.

சார்லி ஹெப்டோ பத்திரிகை மீதான தாக்குதலில் ஈடுபட்ட சையது கோச்சி மற்றும் செரீப் கோச்சி என்ற இருவர் பிரான்ஸ் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் இஸ்லாம் சார்ந்த கேலிச் சித்திரங்களை சார்லி ஹெப்டோ பத்திரிகை சில நாட்களுக்கு மீண்டும் பதிப்பித்தது. இதற்கு தற்போது அல்கொய்தா தீவிரவாத அமைப்பு மிரட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட செய்தியில், “ 2015 ஆம் ஆண்டு சார்லி ஹெப்டோ மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு முறை மட்டுமே நடத்தப்படுவது அல்ல. மீண்டும் நடத்தப்படலாம்” என்று தெரிவித்துள்ளது.

பல மதங்கள் சார்ந்த சர்ச்சைக்குரிய கேலிச் சித்தரங்களை வெளியிடுவதை சார்லி ஹெப்டோ பத்திரிகை வழக்கமாகக் கொண்டுள்ளது. இதன் காரணமாக அப்பத்திரிகை பரவலான விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in