Published : 11 Sep 2020 05:32 PM
Last Updated : 11 Sep 2020 05:32 PM

அமேசானில் வேகமாக பரவும் காட்டுத் தீ; தன்னார்வ அமைப்பு தகவல்

கடந்த ஆண்டுகளைவிட இவ்வருடம் அமேசானில் காட்டுத் தீ தீவிரமாக இருப்பதாக பிரேசிலில் இயங்கும் தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமேசான் பாதுகாப்பு தன்னார்வ அமைப்பு கூறும்போது, “ அமேசானில் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் சுமார் 8,000 அளவில் தீ ஏற்பட்டுள்ளது. இந்தக் காட்டுத் தீ அமேசான் காடுகளில் உள்ள ஏராளனமான உயிர் வளங்களை எரிக்கிறது. மற்ற வருடங்களைவிட இவ்வருடம் அமேசானில் காட்டு தீ பாதிப்பு தீவிரமாக உள்ளது” என்றார்.

காடுகள் அழிக்கப்படுவதை பிரேசில் திறம்படக் கட்டுப்படுத்தும் வரை, ஒவ்வொரு ஆண்டும் காட்டுத் தீ தொடரும் என்று எதிர்பார்க்கலாம். இது அமேசானின் அழிவை மேலும் அதிகரிக்கும். இதன் காரணமாக லட்சக்கணக்கான பிரேசில் மக்கள் சுவாசிக்கும் காற்று விஷமாகிறது என்றும் தன்னார்வ அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் பொருளாதார நலனுக்காக பிரேசிலில் மழைக்காடுகள் அழிவதை தீவிரப்படுத்தி வருகிறார். இதற்கு எதிராக பிரேசில் பூர்வ பழங்குடிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஜெய்ர் போல்சனாரோ பெரும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் காட்டுத் தீ காரணமாக அமேசான் காடுகள் தீக்கு இரையாகின. அப்போது பிரான்ஸ் அதிபர் மக்ரோன் அமேசான் காட்டுத் தீயை அணைப்பதற்கு பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் உதவத் தயார் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், இதனை பிரேசில் அதிபர் நிராகரித்துவிட்டார். மேலும் அமேசான் காடுகள் எரிகிறது என்பது பொய் என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x