அமைதி பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கிடையே ஆப்கானில் தலிபான்கள் தாக்குதல்: 16 பாதுகாப்புப் படைவிரர்கள் பலி

அமைதி பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கிடையே ஆப்கானில் தலிபான்கள் தாக்குதல்: 16 பாதுகாப்புப் படைவிரர்கள் பலி
Updated on
1 min read

அமைதி பேச்சுவார்த்தை நடக்கவிருக்கும் நிலையில் ஆப்கானிஸ்தானில் நன்கர்ஹர் மாகாணத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 16 போலீஸார் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை தரப்பில், “ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியான நன்கர்ஹரில் உள்ள சோதனை சாவடியில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினரில் 16 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியான பக்தியா மாகாணத்தில் சில நாட்களுக்கு முன்னர் தலிபான்கள் தாக்குதல் நடத்தினர்.

வரும் சனிக்கிழமை கத்தாரில் ஆப்கான் அரசு மற்றும் தலிபான்களுக்கும் இடையே அமைதி பேச்சு வார்த்தை நடக்கவிருக்கும் நிலையில், தலிபான்கள் இந்தத் தாக்குதலை நடத்தி உள்ளன.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் தலிபான்களை அவ்வப்போது ஆப்கன் அரசு விடுவித்து வருகிறது.

மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார்.

பக்ரீத் திருநாளை முன்னிட்டு மூன்று நாட்கள் அங்கு போர் நிறுத்தத்திற்கு தலிபான்கள் ஒப்புக் கொண்டனர். முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர தலிபான்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதற்கிடையிலும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகளும் தாக்குதலை அவ்வப்போது நடத்தி வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in