Published : 09 Sep 2020 08:08 PM
Last Updated : 09 Sep 2020 08:08 PM

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் பெயர் பரிந்துரை

2021 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரையை நார்வே நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டியன் செய்துள்ளார்.

இதுகுறித்து கிறிஸ்டியன் கூறும்போது, “பிற வேட்பாளர்களைவிட ட்ரம்ப் நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்த அதிக முயற்சி செய்துள்ளார் என்று நினைக்கிறேன். ஐக்கிய அமீரகம் மற்றும் இஸ்ரேல் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட ட்ரம்ப் வழிவகுத்துள்ளார்.இது மத்தியக் கிழக்குப் பகுதிகளை செழிப்பு மண்டலமாக மாற்றும்” என்று தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படுவது முதல் முறையல்ல.

முன்னதாக, மத்திய கிழக்குப் பகுதியில் ஆபத்தை விளைவிக்கும் இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே முழு வெளியுறவுத் தொடர்புகளை நிறுவுவதற்கான உடன்படிக்கை சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டது. இதில் மத்தியஸ்தராக இருந்தது அமெரிக்கா. இது இஸ்ரேலுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்.

ஏனெனில், பாலஸ்தீனத்துக்கு நாடு என்ற அந்தஸ்து வழங்கும் வரை இஸ்ரேலை அங்கீகரிக்கவோ, அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளவோ கூடாது என்ற முடிவில் மேற்கு ஆசிய நாடுகள் நீண்டகாலமாக இருந்தன. எனினும், 1979-ல் எகிப்துடனும் 1994-ல் ஜோர்டானுடனும் இஸ்ரேல் தனது முழுமையான வெளியுறவுத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது. தற்போதைய உடன்படிக்கை இஸ்ரேலின் வெளியுறவுக்குக் கிடைத்த மூன்றாவது வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x