Published : 08 Sep 2020 07:35 AM
Last Updated : 08 Sep 2020 07:35 AM

ஓமன் அரசுப் பணிகளில் இந்தியப் பெண்களே அதிகம்

ஓமன் புள்ளிவிவரங்கள் மற்றும் தகவலுக்கான தேசிய மையம், 2020-ம் ஆண்டுக்கான புள்ளிவிவர ஆண்டுப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. அதில், ஓமனில் அரசுப் பணிகளில் உள்ள வெளிநாட்டுப் பெண்களில் இந்தியப் பெண்கள் அதிகளவில் இருப்பது தெரிய வந்துள்ளது.

ஓமன் அரசுப் பணிகளில் இந்திய பெண்கள் 4,604 பேர் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக 3,090 எகிப்திய பெண்கள் பணியாற்றுகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டின்படி ஓமனில் அரசுப் பணியில் உள்ள மொத்தமுள்ள இந்திய தொழிலாளர்களில் 37 சதவீதம் பெண்கள் உள்ளனர். இந்தப் பட்டியலில் இந்தியா, எகிப்துக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தில் சூடான் நாட்டு பெண்கள் உள்ளனர்.

தனியார் துறையில் வெளிநாட்டைச் சேர்ந்த பெண்களில் வங்கதேசத்தைச சேர்ந்தவர்கள்தான் அதிகளவில் அதாவது 41,376 பெண்கள் பணியாற்றி வருவதாகவும் தனியார் துறைகளில் இந்தியப் பெண்கள் 27,683 பேர் பணியாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த பெண்களில் பெரும்பாலும் கல்வித் துறையில் பணியாற்றுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x