

அமெரிக்காவில் துப்பாக்கியுடன் செல்ஃபி எடுக்கும்போது தவறுதலாக தன்னைத்தானே சுட்டுகொண்ட இளைஞர் பலியானார்.
அமெரிக்க மாகாணமான டெக்சாஸில் துப்பாக்கியுடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர ்(19) தவறுதலாக தன்னைத் தானே சுட்டுக் கொண்டு பலியானார். துப்பாக்கி குண்டு வெடித்த சப்தம் கேட்டவுடன் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற அவரது உறவினர்கள் இளைஞரை அறைக்குள் ரத்தவெள்ளத்தில் பார்த்தனர்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
போலீஸார் விசாரணையில், இளைஞருக்கு தற்கொலை செய்துகொள்ளும் நோக்கம் எதுவும் இல்லை என்றும் வேடிக்கையான வேலைகளில் ஈடுபடும் அவர் துப்பாக்கியுடன் செல்ஃபி எடுக்கும்போதே இந்த விபரீதம் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் விபத்தினால் நேர்ந்தது என்று விசாரணை நடத்திய ஹூஸ்டன் போலீஸார் தெரிவித்தனர்.