

அமெரிக்காவின் உளவு ரகசியங்களை அம்பலப்படுத் திய எட்வர்ட் ஸ்னோடென் னின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.
உலக நாடுகளையும் அதன் தலைவர்களையும் அமெரிக்காவின் உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு அமைப்பு (என்.எஸ்.ஏ.) பல ஆண்டுகளாக உளவு பார்த்து வந்தது. இந்த விவகாரங்களை என்.எஸ்.ஏ. ஊழியர் எட்வர்ட் ஸ்னோடென் ஆதாரங்களுடன் வெளியிட்டார். தற்போது அவர் ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார்.
இதனிடையே ஸ்னோடென் குறித்து கிரீன்வால்ட் என்ற நிருபர் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய ஹாலிவுட் திரைப்படம் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக இந்தப் புத்தகத்தின் உரிமையை சோனி பிக்சர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் வாங்கியுள்ளது.
இதுகுறித்து சோனி நிறுவனத்தின் ஓர் அங்கமான கொலம்பியா பிக்சர்ஸ் தலைவர் டக் பெல்கார்ட் கூறியபோது, “நோ பிளேஸ் டு ஹைட்” என்ற பெயரில் ஸ்னோடென்னின் வாழ்க்கையை திரைப்படமாக்க உள்ளோம், இந்தத் திரைப்படத்தின் மூலம் பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படும் என்றார்.