சிறுவன் அய்லானுக்கு பேஸ்புக்கில் அஞ்சலி

சிறுவன் அய்லானுக்கு பேஸ்புக்கில் அஞ்சலி
Updated on
1 min read

துருக்கியின் கோஸ் தீவில் கரை ஒதுங்கிய 3 வயது சிறுவன் அய்லானின் சடலமும், அதை போலீஸ்காரர் ஒருவர் கையில் ஏந்திச் சென்ற புகைப்படங்கள் உலகையே கண்ணீர் சிந்த வைத்துள்ளது. இந்த சம்பவம் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சிறுவனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், இந்த கொடூரத்தை கண்டித்தும், அகதிகளை காக்க வேண்டியும் பல்வேறு வகையான படங்கள் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன. அதில் சிறுவனின் உயிரற்ற உடலைப் பார்த்து கடல்வாழ் உயிரினங்களும் கண்ணீர் வடிப்பது போன்று உள்ளது. மற்றொரு படத்தில் வானத்தில் இருந்து வந்த தேவதை சிறுவனை அழைத்துச் செல்கிறார். அப்போது இனியாவது மனிதர்கள் மனிதத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டுமென்று அந்த தேவதை கூறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடற்கரையில் மணலில் வீடு கட்டி விளையாட வேண்டிய சிறுவனை அங்கே பிணமாக்கிய இக்கொடூரத்துக்கு யார் பொறுப்பு என்று மற்றொரு படத்தின் மூலம் கேள்வி எழுப்பப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in