

அமெரிக்காவில் இரு மருந்து தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து தொழில்நுட்ப ரகசியங்களைத் திருடிய குற்றத்துக்காக இந்தியப் பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவைச் சேர்ந்த கேதன் குமார் மணியார் (37) என்பவர், சிஆர் பார்ட்ஸ் சால்ட் லேக் சிட்டி பெஸிலிட்டி மற்றும் பெக்டான் அண்டு டிக்கின்ஸின் ஆகிய இரு நிறுவனங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் பணிபுரிந்து வந்தார். அந்நிறுவனங்களிலிருந்து அவர் ராஜினாமா செய்து விட்டார். அப்போது, அந்நிறுவனங்களின் தொழில்நுட்ப ரகசியங்களை அவர் சொந்த ஆதாயத்துக்காகத் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக கடந்த 2013 ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அவர், இதுவரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.