Published : 04 Sep 2020 04:32 PM
Last Updated : 04 Sep 2020 04:32 PM

நியூசிலாந்தில் மூன்று மாதங்களுக்குப் பிறகு முதல் கரோனா பலி

நியூசிலாந்தில் மூன்று மாதங்களுக்குப் பிறகு கரோனா வைரஸுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நியூசிலாந்து சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “நியூசிலாந்தில் மூன்று மாதங்களுக்குப் பிறகு முதல் கரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்தில் ஏற்பட்ட இரண்டாம் கட்டப் பரவல் காரணமாக ஏற்பட்ட தொற்றால் பாதிக்கப்பட்டு அவர் இறந்துள்ளார். இந்த இறப்பைச் சேர்த்து கரோனா வைரஸுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட காரணத்திற்காக நியூசிலாந்தில் உணவகங்கள், கேளிக்கை விடுதிகளில் மக்கள் கூட்டம் வழக்கம்போல் இருந்துவந்தது. இந்த நிலையில் நியூசிலாந்தில் 102 நாட்களுக்குப் பின்னர் ஆக்லாந்து நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு சில நாட்களுக்கு முன்னர் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அங்கு கரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, ஆக்லாந்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், மக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பொறுப்புடன் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டனர்.

நியூசிலாந்தில் 1,764 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,500க்கும் அதிகமானவர்கள் குணமடைந்தனர். 23 பேர் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x