

பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடைய தட்பவெப்ப மாற்றங்கள் பண்டைய சிந்து சமவெளி நாகரிகம் அழிவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று இந்திய வம்சாவளி அறிவியல் ஆய்வாளர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 5,700 ஆண்டுகளுக்கு உண்டான தரவை ஆய்வு செய்வதன் மூலம் இப்படியிருக்கலாம் என்ற ஆய்வு முடிவுக்கு வந்துள்ளார் அவர். இந்த ஆய்வை நடத்திய இந்திய வம்சாவளி அறிவியல் ஆய்வாளர் நிஷாந்த் மாலிக் என்பவர் ஆவார்.. இவர் அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் தொழில் நுட்ப கழக ஆய்வாலர் ஆவார்.
கடந்த 5,700 ஆண்டுகளின் வட இந்தியாவின் பருவநிலை, தட்பவெப்ப நிலை மாற்றங்களை அவர் புதிய கணித மாதிரி ஆய்வில் கணித்துள்ளார்.
இந்த ஆய்வு முடிவு கேயாஸ் எனும் இதழில் வெளியாகியுள்ளது. தெற்காசிய குகைகளின் பொங்கூசிப் பாறைக் கனிமப் படிவுகளில் ஒரு குறிப்பிட்ட வகை ரசாயான இருப்பின் அளவை ஆய்வாளர்கள் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளனர். இதன் மூலம் கடந்த 5,700 ஆண்டுகளில் அப்பகுதியில் பருவமழையின் அளவு பற்றிய தொகுதியை உருவாக்க முடிந்துள்ளது.
ஆனால் பண்டைய கால பருவநிலை காலத் தொடரை இப்போதைய கணித மாதிரிகளில் கண்டுப்பிடித்துப் புரிந்து கொள்வது பெரிய சவாலான பண என்கிறார் ஆய்வாளர் மாலிக்.
அதாவது பருவநிலை அல்லது வானிலை பற்றிய ஆய்வுகளில் கணிதத்தின் பயன்பாடு என்பது டைனமிக்கல் சிஸ்டம்ச் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படும் அதாவது கடிகாரத்தின் பெண்டுல அசைவின் கால அளவைத் தீர்மானிக்கும் அல்லது குழாயில் தண்ணீரின் ஓட்டத்தை தீர்மானிக்கவும் கணித மாதிரி பயன்படுத்தப்படும். இதைத்தான் டைனமிக்கல் மாடல் என்று அழைக்கின்றனர்.
ஆனால் இந்த டைனமிக்கல் சிஸ்டம் கோட்பாட்டை பண்டைய பருவநிலைத் தரவுகளுக்கு பயன்படுத்துவது கடினம்.
சிந்து சமவெளி நாகரீகம் ஏன் அழிந்தது என்பதற்கு இந்தோ-ஆரியர்கள் என்ற நாடோடிகளின் ஊடுருவலே காரணம் என்பது உட்பட பல கோட்பாடுகள் பேசப்பட்டு வருகின்றன, பூகம்பம் என்று சொல்லப்பட்டன. ஆனால் பருவநிலை மாற்றம் அதன் அழிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்று இந்தக் கோட்பாடு, அந்த கோட்பாடுகளின் வரிசையில் இணைந்துள்ளது
ஆனால் இதற்கும் ஐயம்திரிபற்ற ஆதாரம் இல்லை என்று மாலிக் கூறுகிறார்.
இவரது பகுப்பாய்வின்படி இந்த நாகரீகம் உதயமாவதற்கு சற்று முன்னர் பருவநிலையில் பெரிய மாற்றம் நிகழ்ந்தது, இந்த நாகரீகம் வீழ்ச்சியடைவதற்கு முன்பாக இந்த பருவநிலை மாற்ற வகைமாதிரி தலைகீழ் மாற்றம் அடைந்தது. இதனால்தான் பருவநிலை மாற்றமே சிந்து சமவெளி மாற்றத்துக்குக் காரணம் என்று கணிப்பதாக ஆய்வாளர் மாலிக் கூறுகிறார்.
ஆனால் இதனை நீக்கமற நிரூப்பிக்க இன்னும் தரவுகளும் ஆய்வு மாதிரிகளும் தேவை என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.