Last Updated : 03 Sep, 2020 04:15 PM

 

Published : 03 Sep 2020 04:15 PM
Last Updated : 03 Sep 2020 04:15 PM

2021-ம் ஆண்டுக்குள் கரோனாவால் உலகில் 4.70 கோடி பெண்கள், பெண் குழந்தைகள் மோசமான வறுமைக்குள் தள்ளப்படுவார்கள்: ஐ.நா. ஆய்வில் எச்சரிக்கை

பிரதிநிதித்துவப்படம்

நியூயார்க், பிடிஐ

2021-ம் ஆண்டுக்குள் கரோனாவில் உலகில் 4.70 கோடி பெண்கள், பெண் குழந்தைகள் மிகமோசமான வறுமைக்குள் தள்ளப்படுவார்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் அடைந்த முன்னேற்றம் அனைத்தும் பின்னோக்கி நகர்த்தப்படும் என்று ஐநா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கை வெளியிட்டப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கை குறித்து ஐ.நா.வின் பெண்கள் மேம்பாட்டு நிர்வாக இயக்குநர் பும்ஜைல் மலாம்போ நெகுகா வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

கரோனா வைரஸால் உலகளவில் பெண்கள்தான் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால், ஏழ்மையில் வசித்துவரும் ஆண்கள், பெண்களுக்கு இடையிலான இடைவெளி இன்னும் அதிகரித்து, வறுமை விகிதம் மேலும் உயரக்கூடும்.

எங்களின் முந்தைய கணிப்பில் பெண்களின் வறுமை நிலை 2019 முதல் 2012ம் ஆண்டுக்குள் 2.1 சதவீதம் குறையக்கூடும் என்று கணித்திருந்தோம். ஆனால் கரோனா வைரஸ் பாதிப்புக்குப்பின், பெண்களின் வறுமை 9.1 சதவீதம் அதிகரிக்கும் எனத் தெரியவந்துள்ளது.

இந்த கரோனா வைரஸால் 4.70 கோடி பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் 2021-ம் ஆண்டுக்குள் மோசமான வறுமைக்குள் தள்ளப்படுவார்கள். இதன் மூலம் மோசமான வறுமையில் வாடும் பெண்கள், பெண் குழந்தைகள் எண்ணிக்கை 43.50 கோடியாக அதிகரிக்கும்.

இந்த கரோனா வைரஸ் உலகளவில் வறுமையில் வாடும் மக்களை பாதித்தாலும், பெண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். அதிலும் குறிப்பாக, கருவுரும் வயதில் இருக்கும் பெண்கள் பாதிக்கப்படுவார்கள்.

2021-ம் ஆண்டுக்குள் உலகில் வாழும் 25 வயது முதல் 34 வயதுக்குள் இருக்கும் ஒவ்வொரு 100 ஆண்களும் மோசமான வறுமைக்குள் செல்வார்கள். 2030-ம் ஆண்டுக்குள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையிலான வேறுபாடு 100-118 என்ற நிலையிலிருந்து 100-121 ஆக அதிகரிக்கும்.

பெண்கள்தான் குடும்பத்தில் அதிகமான பொறுப்பு எடுத்து பணி செய்பவர்கள் என எங்களுக்குத் தெரியும். குறைவாக வருமானம் ஈட்டி, குறைவாக சேமித்து, பாதுகாப்பில்லாத பணியில் இருக்கிறார்கள். உலகளவில் ஆண்களின் பணிப்பாதுகாப்பைவிட பெண்களின் பணிப்பாதுகாப்பு 19 சதவீதம் மோசமாக இருக்கிறது.

மத்திய, தெற்காசியா, மற்றும் சஹாரா ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில்தான் மோசமான வறுமைநிலை அதிகரிக்கக்கூடும். கூடுதலாக மத்திய,தெற்காசியாவில் 5.40 கோடி மக்களும், சஹாரா ஆப்பிரிக்காவில் 2.40 கோடி மக்களும் மோசமான வறுமைக்குள் செல்வார்கள்.

கரோனா வைரஸால் தெற்காசியாவில் பொருளாதார வளர்ச்சி மோசமாக வீழ்ச்சியடைந்து, பெண்கள், மற்றும் பெண் குழந்தைகளின் வறுமை நிலை இன்னும் மோசமாகும்.

கரோனா தொற்றுக்கு முன் தெற்காசியாவில் 2021-ம்ஆண்டுக்குள் பெண்களின் வறுமை விகிதம் 10 சதவீதமாகக் குறையும் என மதிப்பிடப்பட்ட நிலையில், இப்போது கரோனா வைரஸால் வறுமை நிலை 13 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கிறோம்.

கரோனா வைரஸ் பாதிப்புக்கு முன் எடுக்கப்பட்ட ஆய்வில் 2030ம் ஆண்டுக்குள் உலகளவில் ஏழ்மையில் இருக்கும் பெண்கள், குழந்தைகள் 15.8 சதவீதம் பேர் தெற்காசியாவில் வாழ்வார்கள் எனக் கணிக்கப்பட்டது.

ஆனால், கரோனாவுக்குப்பின், இப்போது 18.6 சதவீதமாக வறுமை நிலை உயரும் என எதிர்பார்க்கிறோம்.
தெற்காசியாவில் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். அதிலும் 25 முதல் 34 வயதுள்ள பெண்களில் 100 ஆண்கள் பாதிக்கப்பட்டால், 118 பெண்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த விகிதம் படிப்படியாக அதிகரித்து 2030ம் ஆண்டுக்குள் 129 பெண்கள் என்று அதிகரிக்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x