சமீபத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் யாரும் காயம் அடையவில்லை: சீனா

சமீபத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் யாரும் காயம் அடையவில்லை: சீனா
Updated on
1 min read

சமீபத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் எவரும் காயமடையவில்லை என்று சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறும்போது, ''லடாக் பகுதியில் சமீபத்தில் இந்தியா - சீனா இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் எவரும் காயமடையவில்லை. இந்திய ராணுவம் தொடர்ந்து எல்லையில் அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. உடன்படிக்கைகளை இந்தியா மீறுகிறது” என்று தெரிவித்தார்.

''இந்தியா-சீனா இடையே நடைபெற்ற பல மட்டப் பேச்சுவார்த்தைகளின் உடன்படிக்கையை ஆகஸ்ட் 31-ம் தேதி இந்தியப் படைகள் மீறின. பேங்காங் சோ ஏரிப்பகுதியில் எல்.ஏ.சி.யின் ஊடே தெற்குக் கரையில் இந்தியப் படைகள் அத்துமீறி நுழைந்தன. இதுதான் எல்லைப் பகுதியில் மீண்டும் பதற்றங்களுக்குக் காரணம்'' என்று சீனா தரப்பில் தெரிவிக்கப்படது.

முன்னதாக, கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் 6 முனைகளில் அத்துமீற முயன்ற சீன வீரர்களை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். கடந்த ஜூன் 15-ம் தேதி இரு நாடுகளின் வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. ராணுவ, ராஜ்ஜிய ரீதியிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு எல்லையில் இருந்து 2 கி.மீ. தொலைவுக்கு சீன வீரர்கள் பின்வாங்கினர்.

இரண்டரை மாதங்களுக்குப் பிறகு, லடாக்கின் பான்காங் ஏரியின் தெற்கு கரைப் பகுதியில், கடந்த 29-ம் தேதி நள்ளிரவில் 500 சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தி பின்வாங்கச் செய்தனர்.

கடந்த சில மாதங்களாகவே இந்தியா - சீன எல்லையில் பதற்றம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in