ட்ரம்ப்தான் அதிபர் என்று அவருக்கு தெரியுமா?- ஜோ பிடன் கிண்டல்

ட்ரம்ப்தான் அதிபர் என்று அவருக்கு தெரியுமா?- ஜோ பிடன் கிண்டல்
Updated on
1 min read

அமெரிக்க அதிபராக ட்ரம்ப்தான் தற்போது உள்ளார் என்றுஅவருக்கு தெரியுமா ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கிண்டலாக விமர்சித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த வருடம் இறுதியில் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. ஜனநாயகக் கட்சினர் மற்றும் குடியரசு கட்சி சார்பில் அதன் வேட்பாளர்கள் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், வாஷிங்டனில் , டிரம்பிற்கு ஆதரவாக, அவரது ஆதரவாளர்கள் பிரசாரம் செய்தனர். அப்போது, அவர்களுக்கு எதிராக, ஜனநாயக கட்சியினர் குரல் கொடுத்தனர். இதன் காரணமாக அங்கு கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் ட்ரம்ப் ஆதரவாளர் ஒருவர் பலியானார்.

இந்த நிகழ்வை குறிப்பிட்டு ட்ரம்ப் பிரச்சாரம் செய்து வந்தார். இந்த நிலையில் அதற்கு ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அளித்துள்ளார்.

இதுகுறித்து ஜோ பிடன் தனது ட்விட்டர் பக்கத்தில், “டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் அதிபராக இருந்தால் அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று, சரி அவர் தானே தற்போது அமெரிக்க அதிபர், அது அவருக்கு தெரியுமா?” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

மேலும் அதிபர் கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டும், அதனை அதிகரிக்கக் கூடாது ஜோ பிடன் விமர்சித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் அதிபர் வேட்பாளராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர்.

அமெரிக்காவின் அதிபர் மற்றும் துணை அதிபராக குடியரசுக் கட்சி சார்பாக ட்ரம்ப் மற்றும் மைக் பென்ஸ் மீண்டும் போட்டியிடுகின்றனர். இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் மற்றும் மைக் பென்ஸ் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in