ராட்சத பட்டத்தில் இழுத்து செல்லப்பட்ட 3 வயது சிறுமி உயிர் தப்பிய அதிசயம்

ராட்சத பட்டத்தில் சிக்கி வானில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுமி
ராட்சத பட்டத்தில் சிக்கி வானில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுமி
Updated on
1 min read

தைவானின் வடகிழக்கு நகரான ஹிசின்ஸுவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பட்டம் விடும் திருவிழா பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். இதில், தைவான் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். அதன்படி, ஹிசின்ஸுவில் நேற்று முன்தினம் பட்டம் விடும் திருவிழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று விதவிதமான ராட்சத பட்டங்களை பறக்கவிட்டனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக, ஒரு ராட்சத பட்டத்தின் வால் பகுதியில் 3 வயது சிறுமி சிக்கிக் கொண்டாள். சுமார் 100 அடி உயரத்துக்கு சிறுமி இழுத்துச் செல்லப்பட்டாள். அதைப் பார்த்து சிறுமியின் பெற்றோரும், பார்வையாளர்களும் பயத்தில் அலறினர்.

இந்நிலையில், காற்றின் வேகம் குறைந்ததால் அந்த சிறுமியுடன் பட்டம் தரைக்கு வந்தது. இந்த சம்பவத்தில் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக சிறுமி உயிர் தப்பினார். இந்தக் காட்சியை அங்கிருந்த பார்வையாளர் ஒருவர் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in