ஜப்பானின் புதிய பிரதமர்: செப்டம்பர் 17 ஆம் தேதி அறிவிப்பு

ஜப்பானின் புதிய பிரதமர்: செப்டம்பர் 17 ஆம் தேதி அறிவிப்பு
Updated on
1 min read

ஜப்பானின் புதிய பிரதமர் செப்டம்பர் 17 ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஜப்பான் ஊடகங்கள் தரப்பில், “ஜப்பானின் ஆளும் கட்சியான லிபரல் டெமாகிரேடிக் கட்சி தலைமையில் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழு செப்டம்பர் 1 ஆம் தேதி கூடுகிறது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 13 மற்றும் 15 ஆம் தேதிக்குள்ளாக கட்சியிலிருந்து பிரதமரைத் தேர்ந்தெடுத்து 17 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் அரசியல் குடும்பத்தில் பிறந்தவர் ஷின்சோ அபே (வயது 65). ஜப்பானின் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவரான அவர் அதிக காலம் பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமையைக் கொண்டுள்ளவர். ஜப்பானின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைய உதவிய தலைவர் என்ற பெருமையையும் கொண்டவர்.

சில ஆண்டுகளாக, குடல் பாதிப்பு காரணமாக ஷின்சோ அபே அவதிப்பட்டு வருகிறார். இரண்டு முறை மருத்துவப் பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்குச் சென்று வந்த நிலையில், ஷின்சோ அபே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் உடல் நிலையைக் காரணம் காட்டி பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ஷின்சோ அபே அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் உடல்நலம் பெற உலகத் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது புதிய பிரதமர் அறிவிக்கப்பட உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in