Published : 29 Aug 2020 09:44 PM
Last Updated : 29 Aug 2020 09:44 PM

ஷின்சோ அபே விரைவில் குணமடைய உலகத் தலைவர்கள் வாழ்த்து

உடல்நலப் பாதிப்பு காரணமாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, உலகத் தலைவர்கள் பலர் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில் அரசியல் குடும்பத்தில் பிறந்தவர் ஷின்சோ அபே (வயது 65). ஜப்பானின் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவரான பிரதமர் ஷின்சோ அபே, அதிக காலம் பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமையைக் கொண்டுள்ளவர். ஜப்பானின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைய உதவிய தலைவர் என்ற பெருமையையும் கொண்டவர்.

சில ஆண்டுகளாக, குடல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இரண்டு முறை மருத்துவப் பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்குச் சென்று வந்த நிலையில் ஷின்சோ அபே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலகுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் உடல்நல பெற உலகத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

ஷின்சோ அபேக்கு வாழ்த்துத் தெரிவித்த உலகத் தலைவர்கள்

ட்ரம்ப்

நான் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேக்கு அதிகபட்ச மரியாதையைச் செலுத்த விரும்புகிறேன். அவர் எனது சிறந்த நண்பர். அவர் ஜப்பானை மிகவும் நேசித்தார்.

சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஷாவோ லிஜியன்

கடந்த சில வருடங்களாக ஜப்பான், சீனாவுக்கு இடையே உள்ள உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளின் உறவு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதற்கான முயற்சிகளை எடுத்த ஜப்பான் பிரதமருக்கு எங்கள் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் விரைவில் குணமடைய வேண்டும்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

ஜப்பான் பிரதமராக ஷின்சோ அபே பிரதமராக, தனது நாட்டிற்கும், உலகிற்கும் சிறந்த பல செயல்களைச் செய்திருக்கிறார். ஷின்சோ ஆட்சியில் கலாச்சாரம் மற்றும் வர்த்தகம் ரீதியாக பிரிட்டன் - ஜப்பான் உறவு வலிமை அடைந்துள்ளது. உங்கள் அனைத்துச் சேவைகளுக்கும் நன்றி. உடல் நலம் குணமடைய வாழ்த்துகள்.

ஜெர்மனி அதிபர்

ராஜினாமா செய்ததற்கு நான் வருந்துகிறேன். அவருக்கு நல்வாழ்த்துகள். நாங்கள் இணைந்து சிறப்பாக வேலை செய்தோம்.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென்

பிரதம மந்திரி அபே மிகுந்த ஒருமைப்பாடு கொண்ட ஒரு நபராக எனக்கு அறியப்பட்டார். கடின உழைப்பு, எதையும் அடையும் முடியும் என்பதைக் காட்டியவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x