Published : 29 Aug 2020 10:47 AM
Last Updated : 29 Aug 2020 10:47 AM

ட்ரம்பின் ஆட்சி அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தேவை: மைக் பென்ஸ்

அமெரிக்கா தற்போது எதிர்கொண்டிருக்கும் இக்கட்டான காலக்கட்டத்தில் ட்ரம்ப்பின் ஆட்சி இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு தேவை என்று மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அதிபர் மற்றும் துணை அதிபராக குடியரசுக் கட்சி சார்பாக ட்ரம்ப் மற்றும் மைக் பென்ஸ் மீண்டும் போட்டியிட்டுக்கின்றனர். இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் மற்றும் மைக் பென்ஸ் தீவிரவாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் ட்ரம்ப்பின் நிர்வாகம் அமெரிக்காவுக்கு தேவை என்று மைக் பென்ஸ் பேசியுள்ளார்.
இதுகுறித்து மைக் பென்ஸ் கூறியதாவது, “அமெரிக்கா தற்போது எதிர்கொண்டிருக்கும் இந்தக் கட்டக்கட்டான காலக்கட்டத்தில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ட்ரம்பின் ஆட்சி தேவை. உண்மை என்னவென்றால் ஜோ பிடன் கையில் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது. நான்கு வருடங்களுக்கு முன்னர், ட்ரம்புக்கு ஆதரவாக பேசினேன். ஏனென்றால் அமெரிக்கா சிறந்த நாடாக மாற ட்ரம்ப் சிறந்த நோக்கங்களை கொண்டிருந்தார் என்பது எனக்குத் தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஜனநாயக் கட்சித் தலைவர் ஜோ பிடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்கா சீனாவுக்கு சொந்தமாகிவிடும், அமெரிக்க வேலைவாய்ப்புகள் சீனாவுக்கு அளிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரச்சாரம் மேற்கொண்டு இருக்கிறார்.

அமெரிக்கா அதிபர் தேர்தல் இவ்வருட இறுதியில் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.

இதில் ஜனநாயகக் கட்சி சார்ப்பில் ஜோ பிடன் அதிபர் வேட்பாளராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராக தேந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x