Published : 29 Aug 2020 09:51 AM
Last Updated : 29 Aug 2020 09:51 AM

வைரஸ் மையமாக இருந்த சீனாவின் வூஹானில் அனைத்துப் பள்ளிகளையும் திறக்க முடிவு

கோவிட்-19ன் உருவாக்க மையமான சீனாவின் வூஹானில் 2,842 கல்வி நிலையங்கள் வரும் செவ்வாயன்று திறக்கப்படுகின்றன. இதன் மூலம் 14 லட்சம் மாணவர்களுக்கு மீண்டும் கல்வி என்ற நல்வாய்ப்பு கிடைத்துள்ளது.

வூஹான் பல்கலைக் கழகம் திங்களன்று திறக்கப்பட்டது. பள்ளிகளில் முகக்கவசம் அவசியம், பொதுப்போக்குவரத்தை மாணவர்கள், ஆசிரியர்கள் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் நோய்த்தடுப்பு மற்றும் நோய்க்கட்டுப்பாட்டு உபகரணங்களை வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. தேவையற்ற விதங்களில் கூட்டம் சேரக்கூடாது மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு தினசரி அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

முன் கூட்டியே நோட்டீஸ் அனுப்பப் படாத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அனுமதி கண்டிப்பாக மறுக்கப்படுகிறது.

வூஹானில் தோன்றியதாகக் கூறப்படும் கரோனா இன்று உலகையே ஆட்டிப்படைத்து லட்சக்கணக்கான மரணங்களை ஏற்படுத்தியுள்ளதோடு உலகில் பல கோடிக்கணக்கானவர்கள் வாழ்வாதாரத்தையே பாதித்துள்ளது.

வூஹானில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 3,869 ஆக உள்ளது.

டிசம்பர் மாதம் சீனாவை உலுக்கிய கரோனாவின் தாக்கத்திலிருந்து வூஹான் ஏப்ரல் மாதத்திலேயே இயல்பு நிலைக்குத் திரும்பியது. மே 18 முதல் உள்ளூர்வாசிகளிடையே கரோனா தொற்று பரவல் இல்லை என்று சீனா தெரிவித்துள்ளது.

கரோனா மையமாக,உருவாக்க இடமாக இருந்த சீனா தற்போது மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் பள்ளி, கல்லூரிகளையும் திறந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x