

ஆயுதங்களைப் பெருக்குவதற்காக ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் வலியிறுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் இந்த ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்காக கவனம் செலுத்தப்பட்டுவரும் வேளையில், இந்தக் கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சகம் வைத்துள்ளது.
ராணுவத்திற்காக புதிய ஆயுதங்களைத் திரட்டவும், மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் செலவு திட்டங்கள் உள்ளது. இதனை திறம்பட செய்ய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு நிதியை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று ராணுவத் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
மேலும், ராணுவத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில் 43% ஊழியர்களுக்கான செலவுகளில் அடங்கிவிடுகிறது, 26% பிற நடவடிக்கைகளுக்காகவும் 10% நகர குடியுரிமை தொடர்பான விவகாரங்களுக்கு செலவாகிறது. இதில், ராணுவத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை என்று பாகிஸ்தான் அரசிடம் ராணுவம் எடுத்துரைத்துள்ளது.