அமெரிக்காவுக்கு எச்சரிக்கை: தென்சீனக் கடலில் ஏவுகணை செலுத்தி சீண்டும் சீனா

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை: தென்சீனக் கடலில் ஏவுகணை செலுத்தி சீண்டும் சீனா
Updated on
1 min read

தென் சீனக் கடல் பகுதியில் 2 ஏவுகணைகளைச் செலுத்தி போர்ப் பயிற்சி மேற்கொண்டது, சீன ராணுவம், இதனை அமெரிக்காவுக்கான எச்சரிக்கை என்று சீன ஊடகங்கள் வருணித்துள்ளன.

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல்பகுதியில் சீனாவின் ஆதிக்கம் குறித்து பலதரப்புகளிலிருந்தும் கேள்விகள் பிறந்துள்ள நிலையில் இந்த ஏவுகணைச் சோதனையும் அதை அமெரிக்காவுக்கு எதிரான எச்சரிக்கை என்று சீனா வருணித்துள்ளதும் புதிய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

ஹைனன் பகுதிக்கும் பாராசெல் தீவுகளுக்கும் இடையே தென் சீனக் கடலில் சீனா ஏவுகணைகளைச் செலுத்தியது.

சீனாவின் ராணுவப் பயிற்சி இடத்துக்கு மேலே அமெரிக்க உளவு விமானங்கள் பறந்ததையடுத்து சீனா பதிலடி கொடுத்துள்ளது.

ஹாங்காங்கை சேர்ந்த தென் சீன மார்னிங் போஸ்ட் என்ற ஊடகம் தன் செய்தியில் டிஎஃப் 26பி என்ற ஏவுகணையை வடமேற்கு குயிங்காய் மாகாணத்திலிருந்து சீனா ஏவியதாக தெரிவித்துள்ளது. மற்றொரு டிஎஃப்-21 கப்பல் அழிப்பு ஏவுகணை, அதாவது, ‘போர் விமானம் சுமக்கும் கப்பலை அழிக்கும்’ ஏவுகணை கிழக்குக் கடல் பகுதியான ஷீஜியாங் பகுதியிலிருந்தும் ஏவப்பட்டுள்ளது.

சீனா ஒரே நேரத்தில் போஹாய் கடல், மஞ்சல் கடல், கிழக்கு சீன கடல், தென் சீன கடல் ஆகிய 4 பகுதிகளிலும் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

கப்பல் அழிப்பு ஏவுகணையை சீனா செலுத்தலாம் என்று அமெரிக்க உளவுத்துறை செய்தி அவர்களுக்குக் கிடைத்திருக்கலாம் அதனால் தென் சீனக் கடல் பகுதியில் சீன ராணுவப் பயிற்சி முகாம்கள் மீது உளவு விமானத்தை அமெரிக்கா பறக்க விட்டிருக்கலாம் என்று சீன ராணுவ வல்லுநர் ஒருவர் குளோபல் டைம்ஸில் தெரிவித்துள்ளார்.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ழாவோ லிஜியான், “சீனா தன் பகுதியில் மேற்கொள்ளும் கட்டுமானப்பணிகள் அதன் இறையாண்மைக்குட் பட்டதே. இதற்கு ராணுவமயமாக்கலுக்கும் தொடர்பில்லை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in