மீண்டும் பள்ளிக்குச் செல்வது சிறப்பான ஒன்று: கிரெட்டா துன்பெர்க் 

மீண்டும் பள்ளிக்குச் செல்வது சிறப்பான ஒன்று: கிரெட்டா துன்பெர்க் 
Updated on
1 min read

மீண்டும் பள்ளிக்குச் செல்வது சிறப்பான ஒன்று என்று காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கிரெட்டா துன்பெர்க் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து கிரெட்டா தன்பெர்க் தனது ட்விட்டர் பக்கத்தில், “ ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு பள்ளிக்குத் திரும்புகிறேன். மீண்டும் பள்ளிக்குச் செல்வது சிறப்பாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

கிரெட்டா கடந்த ஆண்டு ஜூன் மாதம் இறுதியாக பள்ளிக்குச் சென்றார். இதனைத் தொடர்ந்து காலநிலை மாற்றம் விழிப்புணர்வு தொடர்பாக உலகம் முழுவதும் கிரெட்டா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து தற்போது பள்ளிக்குத் திரும்பியுள்ளார்.

யார் இந்த கிரெட்டா?

”இங்கு பருவநிலை கடுமையாகப் பாதிப்படைந்துவிட்டது. பூமியில் நாம் வெளிவிட்ட கரிம வாயுவினால் பூமியைப் பாதுகாத்து வந்த ஓசோன் படலம் கிழிந்து தொங்குகிறது. ஊடகங்களும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தத் தவறிவிட்டன. இது பற்றி எந்தக் கவலையும்படாமல் உலகத் தலைவர்களே, நீங்கள் பணம் சம்பாதிப்பது பற்றி மட்டும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

என் எதிர்காலக் கனவுகளை, குழந்தைத் தன்மையை உங்கள் வெற்று வார்த்தைகளால் திருடிவிட்டீர்கள். நாங்கள் சாகத் தொடங்கியுள்ளோம். உங்களை நாங்கள் மன்னிக்கவே மாட்டோம்" என்று ஆவேசமாக ஐ.நா.சபையில் உலகத் தலைவர்கள் முன்னிலையில் 16 வயதான கிரெட்டா ஆற்றிய உரைதான் இன்று அவர் உலகம் முழுவதும் கொண்டாடப்படக் காரணம்.

அதுமட்டுமில்லாது, வெள்ளிக்கிழமைதோறும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் மூலம் உலக நாடுகளின் தலைவர்களுக்குக் கொண்டு செல்கிறார் கிரெட்டா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in