மோடி வீடியோவை வெளியிட்டு ட்ரம்ப் பிரச்சாரம்

மோடி வீடியோவை வெளியிட்டு ட்ரம்ப் பிரச்சாரம்
Updated on
1 min read

அமெரிக்காவில் நவம்பரில் அதிபர் தேர்தல் நடக்கிறது. அதிபர் ட்ரம்ப் 2-வது முறையாக குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பிடனும் இதே கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.

இதற்கிடையில், அதிபர் ட்ரம்ப் இந்திய பயணம் மேற்கொண்ட போது பிரதமர் மோடியும் ட்ரம்பும் அகமதாபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினர். அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை கவர பிரதமர் மோடியின் உரை அடங்கிய அந்த வீடியோ ட்ரம்ப் தேர்தல் விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்தில் வைரலானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in