ஹாங்காங் தெருக்களில் 110 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வந்துகொண்டிருக்கும் ட்ராம் வண்டிகளை நிறுத்துவது தொடர்பாக அரசுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பரிந்துரை, அந்நகர மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
"மெதுவாகச் செல்வதுடன், போக்குவரத்து நெரிசலுக்கும் காரணமாக இருக்கிறது" என்று போக்குவரத்து ஆலோசகர் சிட் க்வோக்-கெயுங் கூறுகிறார். ஆனால், ட்ராம் வண்டிகளைத் தங்கள் நகரின் பாரம்பரியச் சின்னமாகக் கருதும் ஹாங்காங் மக்கள், இந்தப் பரிந்துரையை அரசு ஏற்கக் கூடாது என்று வலியுறுத்திக் கையெழுத்து இயக்கம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்கள்.
இதற்கிடையே, ட்ராமுடன் தன் பணியும் பறிபோகுமோ என்ற கவலையுடன் பணிமனையில் உள்ள ட்ராம் வண்டியைத் துப்புரவு செய்துகொண்டிருக்கிறார் தொழிலாளி.