கலிபோர்னியா காட்டுத் தீ: சுமார் 10 லட்சம் ஏக்கர்கள், 700 வீடுகள் எரிந்து சாம்பல்

கலிபோர்னியா காட்டுத் தீ: சுமார் 10 லட்சம் ஏக்கர்கள், 700 வீடுகள் எரிந்து சாம்பல்
Updated on
1 min read

கலிபோர்னியா காட்டுத்தீயிற்கு ஒரு வாரத்தில் சுமார் 10 லட்சம் ஏக்கர்கள் நிலம் எரிந்து சாம்பலாகியுள்ளன. காட்டுத்தீயின் வேகத்தைக் குறைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். காட்டுத்தீயிற்கு சுமார் 700 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

இதனையடுத்து அதிபர் ட்ரம்ப் பேரிடர் தீர்மானம் ஒன்றை வெளியிட்டு அரசு உதவி அளிக்க முடிவெடுத்துள்ளார். இதன் மூலம் வீடிழந்தோருக்கு வீடு, மன அழுத்தங்களுக்கு ஆளோனோருகு கவன்சிலிங் உள்ளிட்ட சமூக சேவைகளும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இரண்டு மிகப்பெரிய காட்டுத் தீ கொத்துகள் சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் பழைய காட்டுத்தீ சாதனைகளை முறியடித்து 2 மற்றும் 3வது பெரிய காட்டுத்தீயாக வரலாற்றில் பதிவாகியுள்ளன.

இதனையடுத்து சான்பிரான்சிஸ்கோ குடாப்பகுதியில் சிகப்புக் கொடு எச்சரிக்கையான அதி தீவிர காட்டுத்தீ எச்சரிக்கையை அமெரிக்க தேசீய வானிலை சேவை மையம் விடுத்துள்ளது. அதாவது ஞாயிறு காலையிலிருந்து திங்கள் மதியம் வரை மகாக் காட்டுத்தீக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 585 காட்டுத்தீ சுமார் 10 லட்சம் ஏக்கர்களை அதாவது 1,562 சதுர மைல்கள், அல்லது 4,096 சதுர கிமீ நிலப்பரப்பை எரித்துச் சாம்பலாக்கியுள்ளது.

இந்த காட்டுத்தீயிறு 5 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 700 வீடுகள் நாசமாயின, ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

13,700 தீயணைப்பு வீரர்கள், வானிலிருந்து தீயை அணைக்கும் முயற்சியில் 10 மாகாணங்களின் உதவி மற்றும் தேசிய காவல்படை மற்றும் அமெரிக்க ராணுவம் ஆகியவை காட்டுத்தீயின் உக்கிரத்தைத் தணிக்க பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in