

இந்தியா முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜோ பிடன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அமெரிக்கா, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள். நீங்கள் எல்லாத் தடைகளையும் தாண்டி, ஞானத்தால் ஆசிர்வதிக்கப்படுவீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
ஜோ பிடன் பதிவுக்குக் கீழே இந்தியர்கள் பலரும் நன்றி தெரிவித்துப் பதிவிட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் 2-வது முறையாகப் போட்டியிடுகிறார்.
ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக ஜோ பிடனும், துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.