

கரோனா தொற்று நோய் காரணமாக உலக நாடுகள் கடும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளன. இதன் காரணமாக நாளும் வேலை இழப்புகள் அதிகமாகி வருகின்றனர்.
ஊரடங்கு முற்றிலுமாக நீக்கும்வரை இந்த வேலை இழப்புகள் தொடரும் என்ற சூழலே நிலவுகின்றது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் அமெரிக்காவில் 10 லட்சத்துக்கும் அதிகமான பேர் வேலையின்மை காப்பீட்டு உதவித் தொகைக்கு விண்ணப்பித்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் வேலையின்மை காரணமாக உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை கடந்த வாரம் 9,70,000 ஆக இருந்தது. தற்போது 10 லட்சத்தை தாண்டியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொருளாதார வல்லுனரான அன்எலிசபெத் கொன்கல் கூறும்போது, “ பொருளாதாரம் சார்ந்து காண வேண்டிய பாதிப்பு இன்னும் இருக்கிறது. இந்த நெருக்கடிக்கு நீண்ட காலம் செல்லும்போது, தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் மீண்டும் பணிக்கு திரும்ப அழைக்கப்பட மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வாஷிங்டன்போஸ்ட் வெளியிட்ட செய்தியில், “ வேலைவாய்ப்புகள் கடந்த சில வாரங்களில் மீட்டெடுக்கப்படுவதை தற்காலிக தரவுகள் காட்டுக்கின்றன. இருப்பினும் இவையும் இயல்பை விட 18 சதவிகிதம் குறைந்தன. மேலும் கடந்த வாரம் வேலை வாய்ப்பு இயல்பை விட 20.3 சதவீதமாக சரிந்தன” என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வட கரோலினாவில் உள்ள வைலேண்ட் காப்பர் தயாரிப்புகள், வில்கேஸ்-பார் போன்ற நிறுவனங்கள் ஆகியவை சமீபத்திய நாட்களில் பணிநீக்கங்களை அறிவித்தன.
அமெரிக்காவில் 50 லட்சத்துக்கு அதிகமான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர்.