Published : 20 Aug 2020 03:45 PM
Last Updated : 20 Aug 2020 03:45 PM

கலிபோர்னியாவில் கடுமையான காட்டுத் தீ: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

கரோனா வைரஸ் காரணமாக பெரும் பாதிப்பை சந்துத்துள்ள அமெரிக்க மாகாணங்களில் கலிப்போர்னியாவும் ஒன்று. இந்த நிலையில் தற்போது கடுமையான காட்டுத் தீயை கலிப்போர்னியா எதிர்க் கொண்டுள்ளது.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ வடக்கு கலிபோர்னியாவில் மின்னல் தாக்குதல்களால் வனப் பகுதிகளில் பயங்கரமான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கடந்த 72 மணி நேரத்தில் 11,000 மின்னல் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியின்போது தீயணைப்பு வீரர் ஒருவர் பலியானார். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி உள்ளனர். கலிபோர்னியா மட்டும் அல்லது சான் பிரான்ஸிகோவிலும் காட்டுத் தீயினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து காட்டுத் தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுத் தீக்கு இதுவரை 20,234 ஹெக்டேர் பரப்பளவு நிலங்கள் சேதமாகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

கலிபோர்னியா கடந்த சில வருடங்களாகவே காட்டுத் தீயினால் பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்து வருகிறது. கடந்த வருடம் மிக மோசமான அளவில் காட்டுத் தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தின் வடக்குப் பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட காட்டுத் தீக்கு 84 பேர் பலியாகினர்.

மேலும் சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் தீக்கிரையாகின. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் நெருப்பில் நாசமாகின என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x