

நேபாளத்தில் கடும் மழைக் காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இவ்வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலியாகினர். 17 பேர் மாயமாகி உள்ளனர்.
இதுகுறித்து நேபாள ஊடகங்கள் தரப்பில்,”நேபாளத்தில் கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கு காரணமாக அச்சம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கில் 6 பேர் பலியாகி உள்ளனர். 17 பேர் மாயமாகி உள்ளனர். மாயமானவர்களில் 10 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தொடர்ந்து மாயமானவர்களை தேடும் பணி நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு அணைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் 28,257 பேருக்கு கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கரோனா பரவலை தடுக்க நடவடிக்கையாக எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பில் முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்றுப் பரிசோதனை முடிவுகள் வெற்றி அடைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்த நிலையில் கரோனாவுக்கு எதிரான ‘முதல்’ வாக்சினைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.