

போர்ச்சுகீசிய அதிபர் மார்செலோ ரெபெலோ டி சவுசா, அல்கர்வே கடலில் சிக்கிய இரு பெண்களை காப்பாற்றினார். இதனைத் தொடர்ந்து போர்ச்சுக்கல் அதிபர் மார்செலோ ரெபெலோ டி சவுசாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறன.
இதுகுறித்து போர்ச்சுக்கல் ஊடகங்கள் தரப்பில், “ கரோனா வைரஸ் காரணமாக போர்ச்சுக்கல் சுற்றுலா துறை கடினமான பாதிப்பை சந்தித்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரமும் சரிந்துள்ளது. இந்த நிலையில் போர்ச்சுக்கல் சுற்றுலா துறையை ஊக்கப்படுத்தும் வகையில் போர்ச்சுக்கல் அதிபர் மார்செலோ ரெபெலோ டி சவுசா அல்கர்வேவில் சுற்றுலாவை ஊக்கப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் அல்கர்வே கடற்கரையில் பத்திரிகையாளர்களிடம் மார்செலோ பேசிக் கொண்டிருந்தார். அப்போது கடலில் இரு பெண்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மார்செலோ காப்பாற்றினார். காப்பாற்றியதுடன் அப்பெண்களுக்கு அறிவுரையும் வழங்கினார்”என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
கரோனா தொற்று:
போர்சுக்கல்லில் 54,448 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 1,784 பேர் பலியாகி உள்ளனர். 39 ஆயிரம் பேர் வரை குணமடைந்துள்ளனர்.