Published : 16 Aug 2020 01:01 PM
Last Updated : 16 Aug 2020 01:01 PM

கடலுக்கு அடியில் ‘பூமராங் பூகம்பம்’ : விஞ்ஞானிகள் அதிர்ச்சி

உலகில் முதல் முறையாக ‘பூமராங் பூகம்பம்’ என்ற புதிய நிகழ்வை கடலுக்கடியில் விஞ்ஞானிகள் நிலநடுக்க அளவைமானி தரவு மூலம் கண்டுப்பிடித்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

2016-ம் ஆண்டு அட்லாண்டிக் கடலில் மேற்கு ஆப்பிரிக்காவின் லைபீரியா பகுதிக்கு அருகே கடலின் அடி தரையில் அதிசய பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக இருந்தது.

இந்த பூகம்பத்தின் விசேடங்களை தென் அமெரிக்க மற்றும் ஆப்ரிக்க டெக்டானிக் பிளேட்களை ஆராய்ந்த போது முதலில் நிலநடுக்க அதிர்வலை வடகிழக்கு நோக்கி விரைவுகதியில் சென்றது, ஆனால் திடீரென திரும்பிய பூகம்ப அதிர்வலை எங்கு உருவானதோ அதே இடத்துக்கு அதே வேகத்தில் வந்தது தெரியவந்துள்ளது. வெளியேறிய அலை மீண்டும் எந்த ஒரு புற தாக்கமும் இன்றி தான் தோன்றிய இடத்துக்கே திரும்பியதால் இதற்கு ‘பூமராங் பூகம்பம்’ என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

அதிர்வலை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வேகமாகச் செல்லும் போதே பயங்கர சேதங்களை ஏற்படுத்தும் இந்நிலையில் உருவான இடத்திலிருந்து ஒரு திசை நோக்கிச் செல்லும் அதிர்வலை மீண்டும் உருவான இடத்துக்கே திரும்பும் பூமராங் பூகம்பம் நிலப்பகுதியை ஒட்டி உருவானால் கற்பனைக்கு எட்டாத சேதங்களை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்தனர்.

பொதுவாக பூகம்பங்களில் ஆற்றல் வெளிப்பாட்டு அதிர்வலை நாம் பேப்பரை குறுக்காக நறுக்குவது போல் ஒரேதிசையில்தான் செல்லும், ஆனால் இந்த பூகம்பத்தினால் உருவான தூசி மண்டலம் நேராக பயணித்து பிறகு உருவான இடத்திற்கே மீண்டும் வந்தது. இது பூமராங் பூகம்பம். இது அடிக்கடி ஏற்படுமா அல்லது அரிதான நிகழ்வா என்பதெல்லாம் ஆராயப்பட்டு வருகின்றன.

நியூயார்க்கிலிருந்து லண்டன் செல்லும் தூரத்தை இந்த அதிர்வலை வேகம் 18.5 நிமிடங்களில் கடக்கக் கூடிய வேகம் கொண்டது என்கின்றனர் விஞ்ஞானிகள். ஏற்கெனவே கூம்பு வடிவத்தில் செல்லும் அதியாற்றல் அதிர்வலைகளால்தான் மேற்பரப்புகளில் அனைத்தும் தூக்கிப் போடப்பட்டு கடும் சேதம் ஏற்படுகிறது, இதில் போன வழியே அதே பாணியில்அது திரும்பி வந்தால் என்ன ஆகும் என்று விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பூகம்பங்கள் ஒவ்வொன்றும் மிகவும் சிக்கலானவை என்பது வழக்கம்தானே தவிர அரிதானது அல்ல என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இமாலயத்தில் ரிக்டர் அளவுகோலுக்கும் எட்டாத பூகம்பங்கள் நிகழ்வது போல் இதுவும் ஒரு புது நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x