

சவுதி மன்னர் சல்மான் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஓய்வு எடுப்பதற்காக நியோம் நகரம் சென்றடைந்தார்.
இதுகுறித்து சவுதி அரசு ஊடகம் தரப்பில், “சவுதி மன்னர் சல்மானுக்கு பித்தப் பை நீக்கம் குறித்த அறுவை சிகிச்சை சமீபத்தில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஓய்வு மற்றும் மீண்டும் புத்துணர்வு பெறுவதற்காக நியோம் நகரம் சென்றடைந்திருக்கிறார் மன்னர் சல்மான். மருத்துவர்களின் ஆலோசனைப்படி மன்னர் சல்மான் தற்போது ஒய்வெடுக்க அறிவுவுறுத்தப்பட்டிருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி மன்னர் சல்மானுக்குப் பித்தப்பையில் வீக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனையில் தரப்பில் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பித்தப்பை நீக்கப்பட்டு தற்போது சவுதி மன்னர் சல்மான் ஒய்வெடுக்க திரும்பி இருக்கிறார்.