Published : 11 Aug 2020 04:00 PM
Last Updated : 11 Aug 2020 04:00 PM

கரோனாவுக்கு எதிரான முதல் வாக்சின்: பதிவு செய்து விட்டதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு

கரோனாவுக்கு எதிரான ‘முதல்’ வாக்சினை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாகவும் தன் மகளுக்கு முதலில் செலுத்தியதாகவும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

கரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாகவும், அனைத்துக்கட்ட சோதனைகளும் வெற்றி அடைந்ததாகவும் ரஷ்யா தெரிவித்திருந்தது. மேலும், விரைவில் மருந்தை பதிவு செய்யவுள்ளதாகவும் கூறியிருந்தது. இந்நிலையில், தடுப்பு மருந்து குறித்து ரஷ்ய அமைச்சர்கள் மத்தியில் வீடியோ கான்பரென்சிங் மூலம் அந்நாட்டு அதிபர் புதின் பேசினார்.

“இன்று காலை உலகில் முதல் முறையாக நாவல் கரோனா வைரஸுக்கு எதிரான வாக்சின் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னுடைய மகள்களில் ஒருவருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதாவது அவரும் இந்தச் சோதனையில் பங்கேற்றுள்ளார்.

ரஷ்யா ஏற்கெனவே கரோனா தடுப்பு மருந்துக்காக பெரிய அளவில் முயற்சிகளை மேற்கொண்டது. பெரிய அளவில் சில வாரங்களில் உற்பத்தி தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டுவாக்கில் பல லட்சம் டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ரஷ்யா கூறியிருந்தது.

பாதுகாப்பான வாக்சினுக்கான அனைத்து சோதனைக் கட்டங்களையும் நிறுவப்பட்ட வழிமுறைகளில் மேற்கொள்ளுமாறு உலகச் சுகாதார அமைப்பு கடந்த வாரம் ரஷ்யாவுக்கு அறிவுறுத்தியிருந்தது.

இந்த வாக்சினைத் தயாரித்தது மாஸ்கோவில் உள்ள கேமலேயா இன்ஸ்டிட்யூட் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x