Last Updated : 16 Sep, 2015 10:42 AM

 

Published : 16 Sep 2015 10:42 AM
Last Updated : 16 Sep 2015 10:42 AM

அமெரிக்காவில் மோடி - நவாஸ் சந்திப்பு இல்லை?

அடுத்த வாரம் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் நகருக்கு செல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் சந்தித்துப்பேச மாட்டர்கள் என புதிய தகவல் வெளியாகி உள்ளது.

இரு தலைவர்களும் சந்தித்துப் பேசும் திட்டம் ஏதும் இதுவரையில் உறுதியாகவில்லை என்று வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக வட்டாரங்களை சுட்டிக் காட்டி பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் டான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

நியூயார்க் வரும் மோடி, ஷெரீப் இருவரும் சந்தித்துப்பேச அமெரிக்கா தலையிடுமா என்று கேட்டதற்கு அமெரிக்க வெளி யுறவுத்துறை செய்தித்தொடர் பாளர் ஜான் கிர்பி கூறியதாவது: இது பற்றி அந்த நாடுகள்தான் முன்வந்து பேச்சு நடத்த வேண்டும். இரு தலைவர்களுக்கும் இடையே பேச்சு தொடங்க வேண்டும் என்பதை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

வெளிப்படையாக இந்த விவகாரத்தில் தலையிட அமெரிக்கா விரும்பாவிட்டாலும் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் குறைய அமெரிக்கா தீவிரமாக தலையிடுகிறது என தூதரக வட்டாரங்களை சுட்டிக் காட்டி டான் தெரிவித்துள்ளது.

ஐநா பொது சபை கூட்டத்தில் பேசும்போது இந்தியா, பாகிஸ்தான் தலைவர்கள் மோதல் போக்கை கையாளக் கூடாது என்பதை அமெரிக்காவும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள பிற நிரந்தர உறுப்பினர்களும் வலியுறுத்தி வருவதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

காஷ்மீர் விவகாரத்தை ஐநா கூட்டத்தில் எழுப்பக்கூடாது என்பது இந்தியாவின் விருப்பம். ஆனால் பாகிஸ்தான் தலைவர் அப்படி செய்ய வாய்ப்பு இல்லை என்பது வாஷிங்டனின் கருத்தாகும்.

காஷ்மீர் மிக முக்கிய விவகாரம். அதுபற்றி விவாதிக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளார். எனவே முன் எப்போதும் இல்லாத வகையில் ஐநாவில் காஷ்மீர் பிரச்சினையை அழுத்தம் திருத்தமாக பாகிஸ்தான் எழுப்பு வதற்கான வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் தூதரக வட்டார தகவல் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x