

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதை வரவேற்றுள்ளது அமெரிக்கா.
இது தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவுச் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி நிருபர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதை அமெரிக்கா வரவேற்கிறது. இந்தியா, பாகிஸ்தான் இடையே நெருக்கம் அதிகரிப்பது ஆக்கபூர்வ நடவடிக்கையாகும்.
அதே வேளையில் நரேந்திர மோடி மே 26 ம் தேதி பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி பாகிஸ்தான் தலைமைக்கு அமெரி்க்கா எடுத்துச் சொல்லுமா என்பதற்கு என்னிடம் பதில் இல்லை. அப்படி பேச்சு நடத்தும் அளவுக்கு அமெரிக்கா செல்லாது. மோடி பதவியேற்பு விழாவுக்கு வரும்படி பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது நிச்சயமானது. இருநாடுகளும் நெருக்கம் கொண்டு பேச்சு நடத்துவதை அமெரிக்கா ஆதரிக்கிறது.
பதவி ஏற்பு விழாவில் அமெரிக்காவிலிருந்து யாரும் பங்கேற்க மாட்டார்கள். இத்தகைய நிகழ்ச்சிகளில் இதுதான் அமெரிக்காவின் நிலை. பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு அமெரிக்காவிலிருந்து இதுவரை எந்த பிரதிநிதியும் சென்றதில்லை என்றார் சாகி.