

சவுதி அரேபியாவில் ஹஜ் புனித பயணத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண் ணிக்கை 45 ஆக அதிகரித் துள்ளது.
ஹஜ் புனித பயணத்தின் முக்கிய நிகழ்வான சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை சவுதியின் மினா நகரில் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 769 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த மேலும் 9 பேர் உயிரிழந்திருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் மூவர், கேரளா, ஜார்க்கண்டை சேர்ந்தவர்கள் தலா இருவர், தமிழகம், மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் 13 இந்தியர்கள் படுகாயத் துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க குழு ஒன்றை அமைத்து சவுதி மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.