இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ராஜபக்சேக்கு மோடி தொலைபேசியில் வாழ்த்து

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ராஜபக்சேக்கு மோடி தொலைபேசியில் வாழ்த்து
Updated on
1 min read

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சே வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கையில் பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இன்று நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் தபால் வாக்குகளின் முடிவில் மகிந்தா ராஜபக்ச கட்சி 73 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறது.

இலங்கையில் 16-வது நாடாளுமன்றத் தேர்தல் 22 தேர்தல் மாவட்டங்களில் நேற்று நடந்தது. ஏறக்குறைய 1.60 கோடி மக்கள் தங்கள் வாக்கைப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி வெற்றி பெறுவதற்கு போதுமான இடங்களை மகிந்தா ராஜபக்சே கட்சி பெற்றுள்ளதால் அவருக்கு தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.

அந்தவகையில் இந்திய பிரதமர் மோடிக்கு ராஜபக்சேக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். மகிந்த ராஜபக்சே தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்திருக்கிறார்.

அதில் அவர் “தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தற்கு நன்றி நரேந்திர மோடி. இலங்கை மக்களிடன் வலுவான ஆதரவுடன் உங்களுடன் இணைந்து பணியாற்றவும், இந்தியா - இலங்கையிடையே நிலவும் நீண்ட கால நட்புறவை மேலும் மேம்படுத்தவும் ஆவலாக உள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in