

பெய்ரூட்டில் இளம்பெண் ஒருவர் தன் திருமணத்துக்குப் புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்தபோது நடந்த வெடி விபத்து குறித்து எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்ட 2,750 டன் மதிப்பிலான அம்மோனியம் நைட்ரேட் மருந்து வெடித்தது. இந்த விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
லெபனானில் நடைபெற்ற இந்த வெடி விபத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் தங்கள் வருத்தங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் பெய்ரூட்டில் வெடி விபத்து நிகழ்ந்தபோது பதிவான வீடியோ காட்சிகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.
வீடியோவில், பெண் ஒருவர் தனது திருமணத்திற்குப் புகைப்படங்கள் எடுக்க போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது வெடி விபத்து நிகழ அப்பெண் அங்கிருந்து ஓடிச் செல்கிறார். இக்காட்சிகளைப் பதிவு செய்த புகைப்படக் கலைஞர் மக்மூத் நாகிப் தற்போது அதனை வெளியிட்டுள்ளார்.
இக்காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
வீடியோ காட்சி