விக்டோரியா மாகாணத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 725 பேர் பாதிப்பு: 15 பேர் பலி

விக்டோரியா மாகாணத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 725 பேர் பாதிப்பு: 15 பேர் பலி
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 725 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து விக்டோரியா மாகாண அரசுத் தரப்பில், “விக்டோரியா மாகாணத்தில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 725 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 15 பேர் பலியாகியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விக்டோரியா மாகாணத்திலிருந்து வருபவர்கள் 14 நாட்களுக்கு ஓட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று நியூ சவுத் வேல்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

விக்டோரியா மாகாணத்தில் கரோனா பரவல் அதிகமாக உள்ளதைத் தொடர்ந்து, அங்கு கரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆறு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முன்னரே ராணுவம் அழைக்கப்பட்டிருந்தது.

ஆஸ்திரேலியாவில் கரோனா பரவல் 75% கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுவரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்திருந்தது. ஆஸ்திரேலியாவில் இதுவரை 19,444 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 247 பேர் பலியாகி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in