சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் வீரர்கள் பூமிக்கு புறப்பட்டனர்: 45 ஆண்டுகளில் முதல்முறையாக கடலில் லேண்டிங்

ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டில் சென்ற அமெரிக்க விண்வெளி வீரர்கள் டாக் ஹார்லி, பாப் பெஹ்னன் : கோப்புப்படம்
ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டில் சென்ற அமெரிக்க விண்வெளி வீரர்கள் டாக் ஹார்லி, பாப் பெஹ்னன் : கோப்புப்படம்
Updated on
2 min read

எலான் மஸ்க்கின் "ஸ்பேஸ்எக்ஸ்" தனியார் நிறுவனம் தயாரித்த ராக்கெட்டில் 2 அமெரிக்க விண்வெளி வீரர்கள் கடந்த மே 30-ம் தேதி நாசா சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற நிலையில் தங்கள் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று பூமிக்கு புறப்பட்டனர்.

45 ஆண்டுகளில் முதல் முறையாக ராக்கெட் கேப்சூல் முதல்முறையாக கடலில் லேண்டிங் செய்யப்படுகிறது. இதற்கு முன்பு, தரையில் லேண்டிங் செய்யப்பட்ட நிலையில் இப்போது கடலில் லேண்டிங் செய்யப்படுகிறது.

ப்ளோரிடாவில் உள்ள கேப் கெனரவலில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இரு அமெரி்க்க விண்வெளி வீரர்களான டாக் ஹார்லி, பாப் பெஹ்னன் ஆகியோரைச் சுமந்துகொண்டு கடந்த மே 30-ம் தேதி பிற்பகல் 3.22மணிக்கு விண்ணில் ராக்கெட் சீறப்பாய்ந்தது.

விண்வெளிக்கு இதுநாள் வரை எந்த தனியார் நிறுவனமும் மனிதர்களை அனுப்பியதில்லை. வரலாற்றிலேயே முதல்முறையாக மனிதர்களை அனுப்பும் முதல் தனியார் நிறுவனம் எனும் பெருமையை “எலான் மஸ்க்கிற்கு சொந்தமான " ஸ்பேஸ்எக்ஸ்"நிறுவனம் பெற்றது.

பூமிக்கு திரும்பும் விண்கலம்
பூமிக்கு திரும்பும் விண்கலம்

இதற்கு முன் மனிதர்களை விண்ணுக்கு அமெரி்க்கா, ரஷ்யா, சீனா அரசுள் மட்டுமே அனுப்பி இருந்தன.முதல்முறையாக தனியார் நிறுவனம் மனிதர்களை அனுப்பியுள்ளது

கடந்த 2011-ம் ஆண்டுக்குப்பின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அமெரிக்க மண்ணிலிருந்து ராக்கெட்டை அனுப்பவில்லை. ஏறக்குறைய 10ஆண்டுக்குப்பின் அமெரி்க்க மண்ணிலிருந்து இரு அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் நாசாவுக்கு முதல்முறையாக ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

விண்வெளி வீரர்களான டாக் ஹார்லி, பாப் பெஹ்னன் ஆகிய இருவரும் தங்களின் இரு மாதப் பணியை முடித்துக்கொண்டு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து நேற்று பூமிக்குப்புறப்பட்டனர். அவர்கள் இருவரையும், நாசாவில் உள்ள வீரர்கள் பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்தனர். அமெரிக்க வீரர்கள் இருவரும் இன்று பிற்பகல் மெக்சிக்கோ வளைகுடாவில் உள்ள கடலில் தங்களின் ராக்கெட்(கேப்சூல்) தரையிறக்குறார்கள்.

முதலில் ப்ளோரிடா கடலில்தான் கேப்சூல் லேண்டிங் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், அங்கு தற்போது புயல்சின்னம் உருவாகி இருப்பதால், பென்சகோலா பகுதியில் தரையிறக்கப்படுகிறது.

கடந்த 45 ஆண்டுகளுக்குப்பின் கடலில் விண்வெளி ராக்கெட்டை தரையிறக்குவது இதுதான் முதல்முறையாகும். இதற்கு முன் கடந்த 1975-ம் ஆண்டு அமெரி்க்கா சோவியத் கூட்டமைப்பில் அப்போலோ-சூயஸ் ராக்கெட் கடலில் தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in