போலாந்தில் அதிகரிக்கும் கரோனா தொற்று

போலாந்தில் அதிகரிக்கும் கரோனா தொற்று
Updated on
1 min read

போலாந்தில் தொடர்ச்சியாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மேலும் 658 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலாந்து சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ போலாந்தில் இன்று (சனிக்கிழமை) 658 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிலிசியா மாகாணத்தில் மட்டும் 200 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை போலாந்தில் 46 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,721 பேர் பலியாகி உள்ளனர்.

திருமண நிகழ்ச்சிகளால் கரோனா பரவல் தீவிரமாக இருப்பதாக போலாந்து சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து திருமண நிகழ்ச்சிகளுக்கு கட்டுபாடுகள் விதிக்க போலாந்து அரசு முடிவு செய்துள்ளது.

போலாந்தில் இதுவரை 150 பேர் திருமண நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுக்கிறார்கள். உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

மனித சமூகத்துக்கே சவாலாக மாறியுள்ள கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்துகளை உருவாக்குவதில் உலக நாடுகள் தீவிர பரிசோதனையில் இறங்கி உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in