பாக். ராணுவத் தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் பலி: ஆப்கானிஸ்தான்

பாக். ராணுவத் தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் பலி: ஆப்கானிஸ்தான்
Updated on
1 min read

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் ராணுவம் தரப்பில், “பாகிஸ்தான் ராணுவத்துக்கும் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே சாமன்-ஸ்பின் போல்டக் பகுதியில் வியாழன் இரவு கடும் சண்டை நடந்தது. இந்த நிலையில் அப்பகுதியில் திருவிழாவுக்காக மக்கள் கூடியிருந்தனர். அப்போது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இம்மாதிரியான தாக்குதலைத் தொடர்ந்தால் ஆப்கன் ராணுவம் தகுந்த பதிலடி அளிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவம் முன்னர் பதிலளிக்கவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மஹ்மூத் குரேஷி, ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுடன் இது தொடர்பாகப் பேசப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த மோதல் காரணமாக பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர தலிபான்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவமும் அவ்வப்போது ஆப்கானிஸ்தான் எல்லையில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in